‘மோடி’-க்கு வந்த சோதனை.., அந்தர் பல்டி அடித்த?

1095

பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம்.நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகியது. இந்த படத்தில் மோடி கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்த படம் நாளை திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தனர். இதனால் தொண்டர்களும் ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

23 மொழிகளில் தயாராகியுள்ள இந்த திரைப்படம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது. எனவே படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் மனு அளித்தன.

அதுமட்டுமின்றி, ஓய்வு பெற்ற 47 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பினர். அதில் “தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த படத்தை வெளியிட அனுமதிப்பது தேர்தல் விதிமீறல் ஆகும்” என்று கூறியுள்ளனர்.

இதே கோரிக்கையை முன்வைத்து டெல்லி, மும்பை ஐகோர்ட்டுகளில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடியாகின.

இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது மும்பை ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு படத்தை எப்போது வெளியிடுவது என்பது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மும்பையில் உள்ள சினிமா தணிக்கை குழுவினருக்குதான் உண்டு. இதில் நாங்கள் தலையிடுவதற்கு எதுவுமில்லை என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு ‘பி.எம்.நரேந்திர மோடி’ திரைப்படம் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என அதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் நாளை வெளியாகாது. விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of