ராஞ்சியில் 21-ந் தேதி மோடி தலைமையில் 30 ஆயிரம் பேர் யோகா பயிற்சி!

309

பிரதமர் நரேந்திர மோடி  அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையில் 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி பேசியபோது இந்தியாவின் பாரம்பரிய கலையான யோகா கலையின் மேன்மை பற்றி விளக்கினார்.

மேலும் சர்வதேச யோகா தினத்தை அறிவித்து கொண்டாட வேண்டியதின் அவசியத்தையும் வலியுறுத்தினார். அதன்பயனாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படும் என ஐ.நா. சபை அறிவித்தது.

அதைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ந் தேதி முதல், யோகா தினம் ஆண்டுதோறும் உலகமெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி வருகிற 21-ந் தேதி ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் நடக்கிற யோகா தின கொண்டாட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார்.

அவரது தலைமையில் 30 ஆயிரம் பேர் திரண்டு வந்து யோகா பயிற்சி செய்ய உள்ளனர். இதேபோன்று தலைநகர் டெல்லியில் ராஜபாதையில் யோகா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை டெல்லி மாநகராட்சியும் ஆயு‌‌ஷ் அமைச்சகமும் இணைந்து செய்து வருகின்றன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of