பிரதமருக்கு கொலை மிரட்டல் விடும் வகையில் பேசியவர் கைது

410

பெரம்பலூரில் தமமுக சார்பில் நடந்த கண்டன கூட்டத்தில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடும் வகையில் பேசியவரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிகாட்டில் கடந்த 23ம் தேதி முத்தலாக் சட்டத்தை ரத்து செய்ததை கண்டித்து த.ம.மு.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் திருச்சி மாவட்ட மாணவரணி செயலாளர் முகமது ஷெரிப் பேசிய போது, பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் முகமது ஷெரிப்பை கைது செய்தனர்.

Advertisement