அதிமுக மீது குற்றச்சாட்டுகள் அரசியலுக்காக பேசியது – தம்பிதுரை பேட்டி

374

அதிமுக மீதும், அமைச்சர்கள் மீதும் எந்த குற்றச்சாட்டும் இல்லை எனவும், அரசியலுக்காக பாமக அப்போது புகார் கூறியிருக்கலாம் என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, “சந்தர்ப்பவாத கூட்டணியான திமுக – காங்கிரசை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என கூறினார்.

அதிமுக மீது பாமகவினர் அளித்த புகார் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக மீதும், அமைச்சர்கள் மீதும் எந்த குற்றச்சாட்டும் இல்லை எனவும், அரசியலுக்காக பாமகவினர் அப்போது புகார் கூறியிருக்கலாம் என்றும் தெரிவித்தார்.