ஒரு தொகுதிக்காக சண்டை போடும் பாமக-தேமுதிக? எந்த தொகுதி தெரியுமா?

877

லோக்சபா தேர்தல் நடக்க இன்னும் சில நாட்களே இருக்கிறது. வரும் ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் பல்வேறு மாநிலங்களில் தொடங்க உள்ளது. ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது.

இந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியை சேர்ந்த கட்சிகள் எங்கு போட்டியிடும், அதிமுக எங்கு போட்டியிடும் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் அதிமுக மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கி உள்ளது. லோக்சபா தேர்தலை அடுத்த முக்கிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாமக 7 இடங்கள், பாஜக 5 இடங்கள், தேமுதிக 4 இடங்கள், புதிய தமிழகம் 1 இடம், புதிய நீதிக்கட்சி கட்சி 1 இடம், என்.ஆர் காங்கிரஸ் 1 இடம், தமிழ் மாநில காங்கிரஸ் 1 இடம், 20 இடங்களில் அதிமுக போட்டியிட உள்ளது.

இந்நிலையில் நேற்று அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இரண்டு கட்சிகளும், கிருஷ்ணகிரி தொகுதியை கேட்டு, சண்டை போட்டுக்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement