பட்ஜெட் 2019-20! கழுவி ஊற்றிய கூட்டணி கட்சி தலைவர்!

892

நிதியமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமன் இன்று 2019-20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாஜக-வின் கூட்டணி கட்சியான பாமகவின் நிறுவனர் ராமதாஸ், பட்ஜெட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள கருத்து பின்வருமாறு:-

“தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தி இருப்பதும் ஏற்று கொள்ள முடியாதது.

ஏற்கனவே தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.27 ஆயிரத்தை நெருங்கி வரும் நேரத்தில் இந்த வரி உயர்வால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.700 வரை உயரும் அபாயம் உள்ளது அதே போல பெட்ரோல், டீசல் மீது ரூ.2 கூடுதல் வரி விதிக்கப்பட்டு இருப்பது அப்பாவி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது சுமையை அதிகரித்துள்ளது. இது அநீதியாகும்.

நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரிவிதிப்பின் அளவு குறைவாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பிசிராந்தையாரின் புறநானூற்றுப் பாடலை மேற்கோள்காட்டினார்.

ஆனால், அவர் அறிவித்துள்ளவரி உயர்வுகள் பிசிராந்தையார் கூறிய அறிவுரைகளுக்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார் ராமதாஸ்.

அதேநேரத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் புதிய நிறுவனங்களுக்கு உதவுவதற்காக அறிவிக்கப் பட்டுள்ள திட்டங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடியவை, இந்தியாவை 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக முன்னேற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மொத்தத்தில் வளர்ச்சி என்ற போர்வை போர்த்தி மூடப்பட்டிருந்தாலும், இந்த நிதிநிலை அறிக்கைகள் வரிச்சுமை சற்று அதிகமாகவே உள்ளது என கூறியுள்ளார்.”

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of