மத்திய அரசின் அதிரடி முடிவு! கடுமையாக எதிர்க்கும் கூட்டணி கட்சி தலைவர்!

576

தேசிய அளவிலான பல்வேறு போட்டித் தேர்வுகள் தமிழில் நடத்தப்படும் நிலையில், அஞ்சல்துறை தேர்வுகளில் மட்டும் தமிழல் நடத்தப்படாது என அறிவித்திருப்பது தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவரது டிவிட்டர் பதிவில், அஞ்சல்துறை தேர்வுகளை தமிழில் எழுத முடியாது என அஞ்சல்துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் திடீரென வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களுக்கு எதிரான என்பதால் இந்த அறிவிப்பை ரத்து செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வுகளை நடத்துவதால், அஞ்சல்துறையில் வட இந்தியர்கள் அதிக அளவில் ஊடுருவ வாய்ப்பு ஏற்படும் என்றும், தமிழே தெரியாத அவர்களை தமிழகத்தில் பணியமர்த்தினால் எவ்வாறு பணி செய்வார்கள்? தமிழ் முகவரிகளை எவ்வாறு படித்து கடிதங்களை வழங்குவர்? என வினவியுள்ளார்.

Advertisement