அ.ம.மு.கவில் இணைந்தார் முன்னாள் பா.ம.க மாநில துணைத்தலைவர்

876

அண்மையில் நடிகர் ரஞ்சித் அ.தி.மு.கவுடன் திடீரென கூட்டணி அமைத்ததால் பாமகவில் இருந்து விலகி அ.ம.முகவில் இணைந்தார். இந்நிலையில் தற்போது பா.ம.க மாநில துணைத்தலைவர் பொங்கலூர் இரா. மணிகண்டன் கட்சியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

ttv-dhinakaran

திமுக – அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு அதிமுகவுடன் திடீரென கூட்டணி அமைத்தது அதிர்ச்சையை அளிக்கிறது. அதிமுக – பாமக கூட்டணி பேரக்கூட்டணி என்று பாமக மீதும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மீதும், அன்புமணி ராமதாஸ் மீதும் சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறி, தனது விலகலுக்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தற்போது டி.டி.வி தினகரன் அவரின் முன்னிலையில் தற்போது அ.ம.மு.கவில் இணைந்துள்ளார்.