பீர் பாட்டிலுடன் விஷால் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

403

பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Ayogya-posterவிஷால் நடித்துவரும் ‘அயோக்யா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் போலீஸாக நடிக்கிறார் விஷால். இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கையில் பீர் பாட்டிலுடன் போலீஸ் ஜீப் மீது விஷால் அமர்ந்திருப்பது போல் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் படம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கையில் பீர்பாட்டில் உடன் இருக்கும் இந்த போஸ்டர் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த விளம்பரம் மூலம் அவரது ரசிகர்களுக்கு நடிகர் விஷால் சொல்ல வரும் செய்தி என்ன? நடிகர் சங்க பொதுச்செயலாளரிடமிருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன்! என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் நடிகர் விஜய் நடித்த சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஃபோஸ்டரில் சிகரெட் குடிப்பது இருந்தற்கும் பாமக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு பின்னர் அது நீக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.