ஊருக்கு உபதேசம் செய்யும் தோழர்களே! இதெல்லாம் என்ன? ராமதாஸ் நறுக்!

820

கேரளாவில் கடந்த 23ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது கேரள போலீசாரின் தபால் ஓட்டுக்களை ஆளும் கட்சியினர் சட்டவிரோதமாக பயன்படுத்திக் கொண்டதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் கேரள போலீசாரின் தபால் ஓட்டுக்களை மொத்தமாக வாங்கி அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவு போலீஸ் சங்கத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கு அனுப்பி வைத்ததும் அந்த தபால் ஓட்டுகள் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு போடப்பட்டதும் உண்மைதான் என தெரியவந்தது.

இந்நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,

“கேரளத்தில் 25,000 காவலர்களின் வாக்குகளை சட்டவிரோதமாக பறித்து தங்களுக்கு பதிவிட்டுக் கொண்ட மார்க்சிஸ்ட் கூட்டணி: செய்தி

ஆஹா… ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் தோழர்கள் தங்கள் கோட்டையை தற்காத்துக் கொள்ள செய்வதெல்லாம் முறைகேடுகள் தானா?”

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

newest oldest most voted
Notify of
K.Rathinakumar
Guest
K.Rathinakumar

அப்டினா இங்கே எடப்பாடி அரசும் இதை தான் செய்கின்றது என்பதை மறைமுகமாக சொல்றாரு டாக்டர்