வெளியானது தேர்தல் அறிக்கை..

551

பா.ம.க.வின் தேர்தல் அறிக்கையை சென்னையில் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.

* ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் வாடும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது.

* உழவர்கள் வாங்கிய ரூ.1 லட்சம் வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

* அனைத்து ஆறுகளையும் தேசிய மயமாக்குவதற்காக பாடுபடும்.

* தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை 100 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

* மத்தியில் புதிய அரசு பதவி ஏற்ற ஒரு வாரத்திற்குள் லோக்பால் அமைப்பு அமைக்கப்படும்.

* சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படுவதற்கு பா.ம.க. பாடுபடும்.

* இட ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பு அகற்றப்படும்.

* தனி நபர்களின் வருமான வரி விலக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சமாக உயர்த்தப்படும்.

* ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 10 சதவீத வரி வசூலிக்கப்படும்.

* ஜி.எஸ்.டி. வரி இரண்டு அடுக்குகளைக் கொண்டதாக மாற்றப்படும்.

* கல்வி பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும்.

* அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்வி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

* மீனவர் நலனுக்காக தனி அமைச்சகம் அமைக்கவும், கச்சத்தீவை மீட்கப் பாடுபடுவோம்.

* திண்டிவனம்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை விரைந்து முடிக்கப்படும்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of