பிரதமர் மோடியை திருடன் என்று விமர்சித்த ராகுல் காந்தி – பா.ஜ.க கண்டனம்

645

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.

இதையொட்டி அரசியல் கட்சிகள் தற்போதே பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில் ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ரபேல் விமான ஒப்பந்தம், மல்லையாவை நாடு கடத்துவது என அனைத்து விவகாரங்களிலும் பிரதமர் மோடி மௌனம் காப்பதாக தெரிவித்தார்.

நாட்டின் காவல்காரன் திருடன் என பிரதமர் மோடியை மறைமுகமாக சாடினார் ராகுல்.

இதனைத்தொடர்ந்து, ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.