நெருங்கிய நண்பர் – துடிப்பானவர் என ட்ரம்பை புகழ்ந்த மோடி

306

7 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, டெக்ஸாஸ் மாகாணத்தில், ஹூஸ்டன் நகரில் அமெரிக்க வாழ் இந்தியர்கள்  ஏற்பாடு செய்த நலமா மோடி என்கிற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்தியாவில் 130 கோடி மக்களுக்கும் சிறந்த வாழ்க்கை தரத்தை அளிப்பதற்காக தமது அரசு பாடுபட்டு வருவதாக கூறினார். புதிய இந்தியா உருவாகி வருகிறது என்றும், அமெரிக்காவுக்கும் – இந்தியாவுக்கும் இடையே நட்புறவு  பலமடைந்துள்ளதாகவும் மோடி கூறினார்.

தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தை தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் பிரதமர் மோடி கூறினார். முன்னதாக, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பேசிய பிரதமர்  அமெரிக்க அதிபர் எளிதாக அணுகக்கூடியவராக இருக்கிறார் என்றும் எப்போதும் அன்புடனும், நட்புடனும் பழகுகிறார் என்றும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியவர் டிரம்ப் என்றும் பிரதமர் மோடி புகழ்ந்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of