குடந்தையில் பாக்கெட் சாராயம் போலீசார் அதிரடி.

253
kumbakonam13.3.19

கும்பகோணம் பேட்டை புதுத்தெருவில் பாக்கெட் சாராயம் தயாரித்து விற்பனை செய்வதாக கும்பகோணம் கிழக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் பேட்டை புதுத்தெரு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது 50 லிட்டர் சாராயத்தை பாக்கெட்டில் நிரப்பி கொண்டிருந்த 3 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சுகுமார் (வயது 40), வேல்முருகன் (35), தமிழ்செல்வன் (45) என்பது தெரிய வந்தது.

இவர்கள் அரசலாறு வழிநடப்பை சேர்ந்த சாராய வியாபாரி அம்புரோஸ் ஏற்பாட்டில் சாராய பாக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்புரோசை தேடி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of