ஆபாச வீடியோ… முதல் கைது எங்கு..? யார் தெரியுமா..?

1088

முகநூலில் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்ததாக முதல் முறையாக திருச்சி மாவட்டம் பாலக்கரையைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

15 பேர் அடங்கிய வாட்ஸ் ஆப் குழுவை கிறிஸ்டோபர் நடத்தி வந்ததாகவும் போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். நிலவன் ஆதவன் என்ற பெயரில் முகுநூலிலும் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஆபாச வீடியோ வீடியோ பார்த்தால் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் எச்சரித்த நிலையில் திருச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.