போக்சோ சட்டம் என்றால் என்ன! விரிவான தகவல்!

2046

பாலியல் குற்றங்கள் சார்ந்த வழக்குகளில் போக்சோ என்ற சட்டம் அடிக்கடி வருவதை கேட்டிருப்போம். ஆனால் அதை பற்றிய முழு தகவல் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இதுகுறித்து விரிவான விவரத்தை தற்போது காண்போம்….

குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் இந்த போக்சோ சட்டம், கடந்த 2012 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் முழு தகவல்கள் பின்வருமாறு:-

1. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை வரை வழங்க வழி செய்வது போக்சோ சட்டம்.

2. இந்த சட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான வழக்கை 3 மாதங்களுக்குள் முடித்து தண்டனை கொடுக்க வேண்டும்.

3. இந்த சட்டத்தின்படி, பாதிக்கப்பட்ட குழந்தையின் எதிர்கால நலன் கருதி குறிப்பிட்ட வழக்கு விசாரணை ரகசியமாக நடத்தப்படும்.

4. குற்றம் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்த பிறகுதான் விசாரிக்க வேண்டும் என்பதில்லை, புகார் வந்த உடனையே போலீஸார் விசாரணையை துவங்கலாம்.

5. பாதிக்கப்பட்ட குழந்தையின் வீட்டிற்கே சென்று போலீஸார் விசாரணை நடத்தலாம். அதேபோல் காவல்நிலைய எல்லை காரணம் காட்டி விசாரணையை அதிகாரிகள் தட்டிக்கழிக்க கூடாது.

6. இந்த சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள விதிகளை காவல்துறை மீறினால் அவர்கள் மீதும் வழக்குபதிவு செய்வதற்கு போக்சோ சட்டம் இடம் அளித்துள்ளது.