“முடியும் முதல்வரே.. அடித்து ஆடுங்கள்..” பாராட்டு மழை பொழிந்த கவிஞர் தாமரை..!

655

தமிழ் வழிக்கல்வியை பயின்று வரும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தமிழக அரசு அதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழ் வழியில் கல்வி பயின்று வருபவர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு பலத்த பாராட்டை தெரிவித்த பாடலாசிரியர் தாமரை, இது விழா எடுத்துக் கொண்டாட வேண்டிய நிகழ்வு என்று தெரிவித்தார்.

மேலும், இதேபோன்று, வங்கிப்பணி, தொடர்வண்டி சேவை, விமான நிலையம் உள்ளிட்ட அனைத்திலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், உங்களால் முடியும் முதல்வரே! அடித்து ஆடுங்கள் என்று அந்த பதிவில் பாராட்டு மழையை பொழிந்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of