வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் – மருத்துவமனைக்கு சென்ற பெண் மயக்கம்

785

சென்னையில் கொரோனா பரவல் தீவிரம் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், இ-பாஸ் இல்லாமல் செல்லும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்கின்றனர்.

இதனிடையே ஆம்புலன்ஸ் சேவை கொரோனா சிகிச்சை பணியில் முழுவதும் ஈடுபட்டுள்ளதால், உடல்நலம் பாதித்த பொதுமக்கள் தங்கள் வாகனங்களிலேயே மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

வாகன சோதனையில் ஈடுபடும் சில காவலர்கள் மருத்துவமனைக்கு செல்லும் வாகனங்களை மனிதாபிமான அடிப்படையில் விட்டு விடுகின்றனர். ஆனால் சில காவலர்கள் மனிதநேயம் இன்றி செயல்படுவது முகச்சூழிப்பை ஏற்படுத்துகிறது.

சென்னை மணலியில் மார்கெட் பகுதியில் மருத்துவமனைக்கு சென்ற வானத்தை போக்குவரத்து காவலர் ஒருவர் தடுத்து நிறுத்தி, ஊரடங்கு மீறியதாக வாகனத்தை பறிமுதல் செய்து கொண்டு வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்த பெண்மணி சிகிச்சை பெற உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் சாலையிலேயே மயங்கி விழுந்தார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் போக்குவரத்து காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.