நிற்காமல் சென்ற ஆட்டோ : விரட்டி சென்ற போலீஸ் – காத்திருந்த அதிர்ச்சி

788

பூந்தமல்லி அருகே, ஆட்டோவில் கத்தியுடன் சென்றவர்களை போலீசார்  7 கிலோ மீட்டர் தூரம்  விரட்டிச் சென்று  திரைப்பட பாணியில் மடக்கி  பிடித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே, போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்த முயன்றனர். ஆனால் ஆட்டோ நிற்காமல் சென்றதால், போலீசார் மோட்டார் சைக்கிளில் ஆட்டோவை விரட்டி சென்றனர்.

அப்போது, காவலர் ஸ்ரீதர் மற்றும் ஊர்க்காவல்படை போலீஸ்காரர் எல்லப்பன் இருவரும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். போலீசார் விரட்டி செல்வதை பார்த்த கண்ணப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிகேசவன், தனது காரில் அந்த நபர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தார்.

இருப்பினும் ஆட்டோவில் இருந்த நான்கு பேரில் மூன்று பேர் தப்பி சென்று விட்டனர். ஒருவரை மட்டுமே போலீசார் மடக்கி பிடித்தனர். அந்த நபர் சென்னீர்குப்பத்தை சேர்ந்த மாலிக் பாஷா என்பது விசாரணையில் தெரிய வந்தது, தப்பிச் சென்ற ராஜேஷ், சபரி, செல்வம் ஆகிய மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மாலிக் பாட்ஷா அளித்த தகவலின் பேரில் முனுசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர். கொள்ளையர்களை 7 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்ற போலீசாரையும், அவர்களுக்கு உதவிய ஊராட்சி தலைவரையும் சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of