முதல்வர் மீது செருப்பு வீசியவர் கைது!

933

தேர்தல் களம் பிரச்சாரங்களால் சூடு பிடித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு அதிமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் தஞ்சாவூர் தொகுதி தமாக வேட்பாளர் என்.ஆர்.நடராஜனுக்கு ஆதரவாக ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் திறந்தவெளி வேனில் முதல்வர் பிரச்சாரம் செய்த போது அவர் மீது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் செருப்பை வீசினார்.

ஆனால், அது அவர் மேல் படாமல் அருகில் இருந்த நின்றிருந்த வைத்திலிங்கத்தின் கையில்பட்டு, வேன் மேல் விழுந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செருப்பு வீசிய நபரை சுற்றி இருந்த அதிமுகவினர் பிடித்து கொடுத்தனர்.

பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், இவர் அதிமுக கட்சியை சேர்ந்தவராக இருந்துள்ளார் என்பதும், இவரின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் அதிமுக சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.

மேலும், வேல்முருகன் மனநலம் பாதிக்கப்பட்டவர் அதற்கான சிகிச்சை ஆவணங்கள் உள்ளதாகவும் வேல்முருகனின் குடும்பத்தார் தெரிவித்தனர். இருப்பினும் வேல்முருகனை போலீஸார் 15 நாட்கள் ரிமாண்ட் செய்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of