“ஆபாசமாக பேசுவதற்கு ரூ.100..” ஆயிரம் ஆண்களை ஏமாற்றிய சம்பவம்..! விசாரணையில் பகீர்..!

317

சென்னை மதுரவாயலை சேர்ந்த உதயராஜ் என்பவர் வேலைக்காக, தனியார் செயலி ஒன்றில் விண்ணப்பித்துள்ளார். அப்போது, ஆபாசமாக உரையாடலாம் எனக்கூறி விளம்பரம் ஒன்று அந்த செயலியில் தோன்றியுள்ளது.

இதனை நம்பி அந்த செயலியில் தோன்றிய விளம்பரத்தின் மூலம் பெண் ஒருவரிடம் உதயராஜ் பேசியுள்ளார். தொடர்ந்து ஆபாசமாக பேசுவதற்கு 100 ரூபாய் கட்டணமும், வீடியோ காலில் பேச ரூ.1000-மும் செலுத்த வேண்டும் என்று அந்த பெண் கூற, அவரும் பணத்தை அளித்துள்ளார்.

ஆனால், பணத்தை பெற்றதும் அந்த பெண் பேசுவதை நிறுத்தியுள்ளார். அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த உதயராஜ் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ராஜ்குமார் ரீகன் என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், இவர் தான் உதயராஜை பெண் குரலில் பேசி ஏமாற்றி இருப்பதும், இதுவரை ஆயிரம் ஆண்களை தன் வலையில் இவர் சிக்க வைத்திருப்பதும் தெரியவந்தது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of