“திருட்டுக்கெல்லாம் பிரத்யேக பயிற்சியா..” அதிர வைத்த ஆந்திர இளைஞர்கள்..!

280

பிரத்யேக பயிற்சி பெற்று, ஒரே நாளில் 11 செல்போன்களை திருடிய ஆந்திர இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை தாம்பரம் பேருந்து நிலையத்தில், பயணிகளின் செல்போனை, ஆந்திராவை சேர்ந்த 2 இளைஞர்கள் நூதன முறையில் திருடி வந்தனர். இதனையறிந்து அங்கு வந்த காவல்துறையினர், அவர்கள் 2 பேரையும் மடக்கிப்பிடித்தனர்.

இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2016-ஆம் ஆண்டில் இருந்தே, இருவரும் பல்வேறு செல்போன்  திருட்டில் ஈடுபட்டதும், நூதன முறையில் செல்போன் திருடுவதற்கு மேற்கு கோதாவரி மற்றும் ஹாக்கிவீடு ஆகிய பகுதிகளில் பயிற்சி பெற்று வந்ததும் தெரிய வந்தது.

பின்னர் அவர்கள் 2 பேர் மீதும் திருட்டு வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவர்கள் ஏற்கனவே செல்போன் திருடிய வழக்கில் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement