“ஏய் என்ன பண்ற..” பாலியல் தொல்லை.. திருநங்கையை கொன்ற இளைஞர்..

6357

கோவை மாவட்டம் சாய் பாபா நகரில் வசித்து வந்த திருநங்கை சங்கீதா சில தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், 23 வயதுடைய இளைஞரை கைது செய்துள்ளனர்.

கோவையில், சமீபத்தில் தண்ணீர் டிரம்மில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட திருநங்கை சங்கீதாவின் கொலை வழக்கில், நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், முகநூல் மூலம் சங்கீதா குறித்து தெரிந்துகொண்டதாகவும், பின்னர் தொலைபேசி மூலம் அவரை தொடர்பு கொண்டு, கடந்த 23 நாட்களுக்கு முன்பு அவரது உணவகத்தில் பணிக்கு சேர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தங்க இடமின்றி, சங்கீதா வீட்டில் தங்கியதாகவும், அவர் தனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் இரண்டாம் கட்ட விசாரணை நடத்தியதில், இளைஞர் கூறியது பொய் என்றும், அவர் தான் திருநங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement