பாலியல் தொழில் நடத்திய நடிகர்..! சிக்கிய 3 சீரியல் நடிகைகள்..!

4004

பாலியல் தொழில் என்பது இந்தியாவில் உள்ள பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக பார்க்கப்படுகிறது. ஆனால், இதேபோன்ற விஷயங்கள், சில பைவ் ஸ்டார் ஓட்டல்களில், பெரும் புள்ளிகள் பலர் உதவியுடன் சகஜமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மும்பையில் உள்ள 5 ஸ்டார் ஓட்டல் ஒன்றில், பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, செல்போனில் வாடிக்கையாளர் போல் தொடர்பு கொண்ட போலீசார், 10.50 லட்ச ரூபாய்க்கு டீலிங் பேசினர்.

பின்னர், 5 ஸ்டார் ஓட்டலின் அறையில் மறைந்திருந்த அவர்கள், அங்கு வந்த நடிகர் ஒருவரையும், அவருடன் வந்த சீரியல் நடிகைகள் 3 பேரையும் கைது செய்தனர்.

மேலும், இந்த சம்பவத்தில் வேறு ஏதேனும் பிரபலங்களுக்கு தொடர்பு உள்ளதா என்றும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement