தனியறை.., விடுதிகளில் தங்கும் ஆண்கள்.., குறிவைக்கும் கும்பல்..,

1002

சென்னை தாம்பரத்தில் தனியறை மற்றும் விடுதிகளில் தங்கும் ஆண்களை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இளைஞர்கள் தங்கியுள்ள தனி வீடுகள் மற்றும் விடுதிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தன.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டுவை சேர்ந்த சத்தியராஜ், கார்த்திக், ராம்குமார், சக்திவேல் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 5 லட்சம் மதிப்பிலான லேப்டாப்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of