“என் மனைவி ஒரு..,” கணவன் சொன்ன அந்த வார்த்தையால் பரபரப்பு..! போலீசின் அதிரடி முடிவு..!

1121

எப்போதும் பரபரப்பாக இருக்கும் டெல்லி விமான நிலையத்திற்கு, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் போன் செய்து, என் மனைவி ஒரு மனித வெடிகுண்டு, அவர் சவுதி அல்லது துபாய்க்கு செல்ல இருக்கிறார். நடுவானில் பறந்துக்கொண்டிருக்கும் போது விமானத்தை வெடிக்க வைக்க உள்ளார். என்று கூறி போனை கட் செய்துள்ளார்.

இதனால் துபாய், சவுதி செல்லும் விமானங்களை பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். சோதனை செய்ததில், செல்போனில் வந்த தகவல் புரளி என்று கண்டறியப்பட்டது.

யார் இந்த புரளியை பரப்பினார் என்று போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் நஸ்ருதீன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், நஸ்ருதீன் பீகாரை சேர்ந்தவர் என்பதும், அவர் தோல் தொழிற்சாலை நடத்தி வந்தவர் என்பதும் தெரிய வந்தது.

மேலும், மனைவி சபீனா, தனது எதிர்ப்பை மீறி வெளிநாட்டில் வேலைக்கு செல்ல முயன்றதால், அவரை திரும்பிக்கொண்டு வரவே இவ்வாறு செய்துள்ளதாக நஸ்ருதீன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of