பெண்கள் தான் டார்கெட்.., மெதுவாக போய் பாஞ்சிடுவேன்.., அதிர வைக்கும் கார்த்திக்..,

2226

சென்னை தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட சில பகுதிகளில் தொடர்ந்து செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்துக்கொண்டு வந்துள்ளது.

வழக்குகள் அதிகமாக வந்ததால், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். முதலில் சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

அந்த சிசிடிவியில் பதிவான வீடியோக்களில் ஒரே ஆள் தான் எல்லோரிடமும் திருடியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த நபர் இருக்கும் இடத்தை கண்டு பிடித்த போலீசார், சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், இவர் பெயர் கார்த்தி என்பதும், இரவில் தனியாக செல்லும் பெண்கனை மட்டும் குறி வைத்து ஜெயின், செல்போன்களை பறித்து வந்துள்ளார் என்பதும் தெரிய வந்தது.

இவர் தனியாக வரும் பெண்களை நோட்டமிட்டு, பின்னர் அவர்கள் பின்னாடியே மெதுவாக பைக்கில் சென்று, ஜெயின்களை திருடி வந்துள்ளார், இவரிடம் செல்போன்கள், நகைகளை போலீசார் பறிமுதல் செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of