போலீஸ் காருக்குள் எல்லை மீறிய ஜோடி..! கதவை திறந்ததும் அதிர்ந்த போலீஸ்..!

562

அமெரிக்காவின் புளோரிடா மாகானத்தில் ஆரன் தாமஸ் மற்றும் மேகன் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். ஆரன் தாமசிற்கு 33 வயது. மேகனுக்கு 35 வயது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவரும் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்று கார் ஒன்றை இடித்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். அவர்களை மடக்கிப்பிடித்த போலீசார், கைது செய்து போலீஸ் வாகனத்தில் அமர வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

திடீரென அவர்கள் இருந்த போலீஸ் வாகனம் குழுங்கத் தொடங்கியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், காரின் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது தம்பதியினர் இருவரும் உடலுறவில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அவர்களை கட்டுப்படுத்த முயற்சி செய்தனர். பிறகு, மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், பொது இடத்தில் தவறாக நடந்துக்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.