‘அப்பா’ என அழைக்க மறுத்த வேறொருவரின் குழந்தை.. சிகரெட் நெருப்பால் சுட்ட காவலர்..

2564

சட்டீஸ்கர் மாநிலம் பலோத் மாவட்டத்தில் வசித்து வரும் பெண்ணிற்கு, ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கணவன் வெளி ஊரில் வேலைக்கு சென்றுவிட்டதால், அப்பெண் தனியாக வசித்து வருகிறார்.

இந்த பெண்ணிற்கு அவினாஷ் ராய் என்ற காவலர் கடனுக்கு பணம் கொடுத்துள்ளார். கொஞ்சம், கொஞ்சமாக பணத்தை பொற்று வந்த காவலர், திடீரென அந்த பெண்ணின் வீட்டிலேயே தங்க ஆரம்பித்துள்ளார். இதுமட்டுமின்றி, பாலியல் ரீதியிலான தொந்தரவுகளும் அளித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று, அப்பெண்ணின் குழந்தையிடம், அப்பா என்று அழைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால், குழந்தை அவ்வாறு அழைக்காததால், சிகரெட் நெருப்பை கொண்டு சுட்டுள்ளார்.

மேலும், அந்த பெண்ணையும் கடுமையாகி தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த அவினாஷ் ராயை கைது செய்தனர்.

Advertisement