அந்த தொழில் நடப்பதாக தகவல்..! பிடிக்க சென்ற போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

983

புதுச்சேரியில் சொகுசு விடுதி ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி அன்று போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது, வெளி மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தப்பட்டது உறுதியானது. இதையடுத்து தில்லிபாபு, ரமேஷ், துரைராஜ், செல்வம், சுந்தர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், பாலியல் தொழில் ஈடுபட்ட பெண்களை கைது செய்யும் போது, 16 வயது சிறுமி அங்கு அடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், விபசார வழக்கை, சிறுமி பாலியல் பலாத்கார வழக்காக மாற்றினர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த சோதனையின் போது, முக்கிய குற்றவாளி ராஜேந்திரகுமார் தப்பியோடிவிட்டார். அவரை நீண்ட நாட்களாக தேடி வந்த காவல்துறையினர், கடந்த 7-ஆம் தேதி அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த சிறுமி பாலியல் வழக்கில், முக்கிய புள்ளிகள் ஈடுபட்டிருக்கலாம் என்றும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of