வெப் சீரிஸ் மோகம்.. நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த 17 வயது சிறுமி.. காத்திருந்த அதிர்ச்சி..

1825

டெல்லியை சேர்ந்த 17 வயது சிறுமியை, பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டுள்ளார். அதில், தன் பெயர் ராஷி கோயல் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த பெண், தான் பணிபுரியும் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் வெப் சீரிஸ் எடுக்க இருப்பதாகவும், அதற்கான நேர்முகத் தேர்வு நடைபெற இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பங்கெடுக்க விருப்பம் இருந்தால், நிர்வாண புகைப்படத்தை தனக்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்டுள்ளார். வெப் சீரிசில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில், தனது நிர்வாண புகைப்படத்தை அந்த சிறுமியும் அனுப்பி வைத்திருக்கிறார். இன்னும் அதிகமான புகைப்படங்கள் வேண்டும் என்று ராஷி கேட்டதையடுத்து, சிறுமி அந்த இன்ஸ்டாகிராம் கணக்கை பிளாக் செய்துள்ளார்.

பின்னர், செல்போனில் தொடர்பு கொண்ட தீபக் என்ற நபர், “உனது நிர்வாண புகைப்படம் எங்களிடம் உள்ளது. நாங்கள் கேட்ட பணத்தை நீ கொடுக்கவில்லை என்றால், சமூக வலைதளங்களில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துவிடுவோம்” என்று மிரட்டியுள்ளனர்.

அதன்பிறகே, தன்னிடம் பேசியது பெண்ணில்லை..? ஆண் என்பது அச்சிறுமிக்கு தெரியவந்தது. தொடர்ந்து பல்வேறு மிரட்டல்கள், அந்த டெல்லி சிறுமிக்கு வந்துள்ளது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகிய அவர், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீபக்கை கைது செய்தனர்.