தாயிடம் தகாத உறவு.., மகளையும் விட்டு வைக்கவில்லை.., மணிமுத்து செய்த கொடூரம்..!

1923

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த மணிமுத்து என்பவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருபவர். இவருக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது.

அந்த பெண்ணின் கணவர் உயிரிழந்த நிலையில், மணிமுத்துவை வீட்டிற்கு அழைத்து வந்து இருவரும் கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் மணிமுத்து வீட்டில் இருந்த கள்ளக்காதலியின் மகளிடம் அடிக்கடி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதனிடையே மகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவரிடம் அந்த பெண் அழைத்து சென்றுள்ளார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், உங்களின் மகள் 2 மாத கர்ப்பினியாகி உள்ளார் என்று கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்து மகளிடம் விசாரித்த போது, மணிமுத்து தான் காரணம் என்று சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த காங்கயம் மகளிர் போலீசார், மணிமுத்துவை கைது செய்தனர். பின்னர் திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of