மெரினாவில்.., அதுவும் மாலை நேரம் தான்.., இளம்பெண்ணிடம் இளைஞர்கள் செய்த விபரீதம்..,

1228

சென்னை எழும்பூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது தோழி ஒருவருடன் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். பொதுப்பணி துறை அலுவலகம் எதிரே இருந்த கடற்கரைப் மணல் பரப்பில், இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வடமாநிலத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் வந்துள்ளனர். போதையில் இருந்த அவர்கள், அந்த பெண்களிடம் இந்தி தெரியுமா என்று பேச்சுக்கொடுத்துள்ளனர். திடீரென அந்த இளைஞர்களில் ஒருவர் அந்த பெண்ணை பின்பக்கமாக சென்று கட்டிப்பிடித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் இருவரும், அவர்களை மணலில் தள்ளவிட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். பிறகு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர்களான பாண்டியராஜன், தமிழரசன், பெருமாள்ராஜா ஆகிய 3 பேரிடமும் நடந்த சம்பவம் பற்றி முறையிட்டுள்ளனர்.

உடனே போலீசார் 3 வாலிபர்களில் 2 பேரை விரட்டி பிடித்தனர். பின்னர் அவர்கள் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.