காதலி வீட்டிற்கே சென்று வரம்பு மீறிய கள்ளக்காதலன்..! நேரில் பார்த்த கணவர்..! பிறகு நேர்ந்த கொடூரம்..!

1015

சென்னை பாடி கலைவாணர் நகரில் உள்ள ஆட்டோ ஸ்டான்டில் ஆட்டோ ஓட்டி வந்தவர் சுரேஷ். இவர் மீது பல்வேறு கொலை குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவருக்கும், அதே பகுதியில் டிபன் கடை நடத்தி வந்த கார்த்திகா என்ற பெண்ணிற்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.

இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் தனது கள்ளக்காதலை கார்த்திகா தவிர்த்து வந்துள்ளார் என்றும், இருப்பினும் சுரேஷ் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சம்பவத்தன்றும் கார்த்திகாவின் வீட்டிற்கு குடிபோதையில் சென்று அவரிடம் வரம்பு மீறியுள்ளார் சுரேஷ். இதனை கண்ட கார்த்திகாவின் கணவர், சுரேசை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் மயக்கமடைந்த சுரேசை, கார்த்திகாவின் கணவர் மற்றும் அவரது 2 நண்பர்கள் யாரும் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்தனர். பின்னர் உடல் மற்றும் தலையை இரண்டாக வெட்டி, தலையை ஒரு பகுதியிலும், உடலை ஒரு பகுதியிலும் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

நீண்ட நாட்களாகியும் மகன் வீட்டிற்கு திரும்பாததால், சுரேசின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இந்த வழக்கை விசாரித்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர்.

கொலைக்கு காரணமான, சுரேசின் கள்ளக்காதலி கார்த்திகா, அவரது கணவர் ஜெயக்கொடி, ராஜா மற்றும் சுந்தரகாண்டன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.