இனி தட்கல் டிக்கெட் எளிமையாக கிடைக்கும்..! 60 பேர் கைது..! போலீசார் அதிரடி..!

394

உடணடியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்காக தட்கல் டிக்கெட்டை பயணிகள் வாங்குவது வழக்கம். ஆனால், இந்த டிக்கெட்டிற்கான முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்துவிடும். இதனால், பல பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பி விடுகின்றனர்.

ஒரு சில ஏஜென்ட்டுகள், சட்டவிரோத மென்பொருள்களை பயன்படுத்தி, தட்கல் டிக்கெட்டை மொத்தமாக வாங்குவது தான் இதற்கு காரணம் ஆகும். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தை முடக்கும் ‘ஏ.என்.எம்.எஸ்., எம்.ஏ.சி., ஜாக்குவார் ஆகிய சட்டவிரோத மென்பொருளை ஏஜெண்டுகள் பயன்படுத்தி முறைகேடாக தட்கல் டிக்கெட் பதிவு செய்தது தெரியவந்தது.

இதையடுத்து பல்வேறு ரயில்வே கோட்டங்களை சேர்ந்த 60 ஏஜென்டுகளை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் தட்கல் டிக்கெட் இனி எளிமையாக கிடைக்கும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of