“கோர்.. சியா..” கோர்ட்வேர்ட் வைத்து கஞ்சா விற்பனை..! பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

315

சென்னையில் கஞ்சா விற்பனை படுவேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனைத்தடுக்க சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இதற்காக சென்னையின் பல்வேறு பகுதிகளில் போலீசார், அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை பாடி பாலத்தின் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாரை பார்த்த இளைஞர் ஒருவர், தப்பி ஓட முயன்றார். அவரை சேஸ் செய்து போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை கைது செய்த போலீஸ், அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன்படி, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் பெயர் கணேஷ் என்பதும், அவர் ஒரு கஞ்சா வியாபரி என்பதும் தெரிய வந்தது.

மேலும், பெரிய அளவில் கஞ்சா பொட்டலங்களை வாங்கும் கணேஷ், கூலித் தொழிலாளர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினருக்கு ரூ.500, ஆயிரம் என்ற விலையில் விற்பனை செய்து வந்துள்ளார்.

இதையடுத்து கணேஷின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், அங்கிருந்த 5 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும், அவர் அளித்த தகவலின் பேரில், கஞ்சாவை டெலிவரி செய்யும் ரியாஸ் முகமது என்பவரை பொறி வைத்து போலீசார் கைது செய்தனர்.

கணேஷ் சரக்கு கேட்பது போல், போனில் அழைத்தார். அதன்பிறகு சரக்கு கொண்டு வந்த ரியாசை, மறைந்திருந்த போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். இவர்கள் கஞ்சாவை விற்பனை செய்யும் போது, பணத்தை சியா என்றும், கஞ்சா பொட்டலங்களை கோர் என்றும் அழைக்கின்றனர்.

இது அவர்களின் கூட்டத்திற்கு தெரிந்த கோர்ட்வேர்ட் ஆகும். மேலும் தொடர்ந்து போலீசார் கணேஷிடம் விசாரணை நடித்தி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of