செல்போனில் நீண்ட நேரம் பேசிய மனைவி..! தட்டி கேட்ட கணவரின் அக்கா..! பிறகு நேர்ந்த பயங்கரம்..!

1335

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குலசேகரன் கோட்டையை சேர்ந்தவர் காளியம்மாள். 51 வயதாகும் இவருக்கு, பச்சை ராஜ் என்ற தம்பி உள்ளார்.

பச்சை ராஜிற்கும், கணபதியம்மாள் என்ற பெண்ணிற்கும் இடையே கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கணபதியம்மாள், அதே ஊரை சேர்ந்த சரவண பெருமாள் என்ற நபரிடம் செல்போனில் அடிக்கடி பேசி வந்துள்ளார். இந்த விஷயம் பச்சை ராஜிக்குக்கும், பாண்டியம்மளிற்கும் தெரியவரவே, அவர்கள் சரவண பெருமாளிடம் கேட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சரவண பெருமாள், பச்சையம்மாளின் வீட்டிற்கு சென்று அங்கு தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில், அங்கு இருந்த பச்சையம்மாளை, சரவண பெருமாள் கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பச்சையம்மாள், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சரவண பெருமாளை கைது செய்தனர்.

Advertisement