அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..! இதுக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு..?

509

அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இந்த குண்டு கண்டிப்பாக வெடிக்கும் என்றும் போனில் பேசிய நபர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்களுடன் காவல்துறையினர் அஜித் வீட்டிற்கு சென்றனர். ஒரு மணி நேர சோதனைக்கு பிறகு, அஜித் வீட்டில வெடிகுண்டு இருப்பதாக வந்த செய்தி புரளி என்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார், மரக்காணம் பகுதியை சேர்ந்த புவனேஷ்வரனை கைது செய்தனர். இவர் ஏற்கனவே விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement