8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தோரை போலீசார் கைது செய்தனர்

605

திருவண்ணாமலையில், 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த 40-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை – சேலம் 8 வழி பசுமைசாலை திட்டத்திற்கு சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருண்ணாமலை மாவட்டம் நம்மியேந்தல் கிராமத்தில் 8 வழி சாலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் கருத்து கேட்பு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்திற்கு வருகை தந்த 40 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் நம்மியேந்தல் கிராமத்தில் எஸ்.பி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of