ரூபாய் நோட்டாக மாறும் கருப்புத் தாள்..? சினிமாவை மிஞ்சும் அலப்பறை!

607

ஈரோடு, புதுக்கோட்டை, தாராபுரம் ஆகிய இடங்களில் உள்ள வியாபாரிகள் உள்ளிட்டோரை அணுகிய கும்பல், பணம் இரட்டிப்பாக்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

அவர்களிடம் கருப்புத் தாளை காண்பித்த கும்பல், அந்தக் கருப்புத் தாளை ரசாயனத்தில் மூழ்கடித்தால் பணமாக மாறும் என்று தெரிவித்துள்ளனர். இதற்காக சில தாள்களை மட்டும் ரூபாய் நோட்டுகளாக மாற்றி வைத்து அவர்களை ஏமாற்றியுள்ளனர்.

இதனை நம்பி பலரும், லட்சக்கணக்கில் பணம் கொடுத்து கருப்புத் தாள்களை கட்டுக்கட்டாக வாங்கிச் சென்றுள்ளனர். வீட்டிற்கு சென்று கருப்புத் தாள்களை ரசாயன கலவையில் முக்கியபோது அவை வெற்று பேப்பர்களாக மாறியுள்ளது.

இந்த மோசடி கும்பலை போலீசார் ஒருவருடமாக தேடிவந்த நிலையில், மேலும் பலரை ஏமாற்ற திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடைவிரித்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் மோசடி கும்பலை சேர்ந்த மூன்று பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பிடிபட்டவர்கள் வாணியம்பாடியை சேரந்த ஷாஜகான், தஸ்தகீர் மற்றும் தர்ம்புரியை சேரந்த கோபிநாத் என்பதும், இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இதேபோல் மோசடியில் ஈடுபட்டதும் தெரிவந்தது. இந்த மோசடியில் மேலும் பலருக்கு தொடர்பு உள்ளதால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of