சனிக்கிழமை மட்டுமே திருடும் கொள்ளையர்கள்! அதுவும் இது மட்டும் தான்..,!

580

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, தினைக்குளம், தாமரைகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமைகளில் மட்டும் லேப்டாப் போன்ற எலக்ரானிக் பொருட்கள் திருடப்பட்டு வருவதாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரையடுத்து போலீசார், வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இந்த திருடர்கள் குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள அரிசி மண்டி ஒன்றில் தங்களது கைவரிசையை காட்டி, லேப்டாப் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச்சென்றனர்.

அப்போது அங்கிருந்த சிசிடிவியில் திருடப்படும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்ததில், அந்த வீடியோவில் இருந்த ஒருவர் இதற்கு முன் தினைக்குளம் பகுதியில் உள்ள செல்போன் கடையிலும் திருடி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து வீடியோவில் இருந்த அந்த நபரின் புகைப்படத்தை வைத்து, ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் குற்றவாளிகளை கையும் களவுமாக பிடித்தனர். தொடர்ந்து அவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement