ஒரே பெண்ணை காதலித்த 2 பேர்..! இறுதியில் நேர்ந்த பயங்கரம்..!

437

திண்டுக்கல் மாவட்டம் சாலையூர் கிராமத்தை சேர்ந்த அஜித். இவர் அப்பகுதியில் உள்ள வெல்டிங் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், ரத்தம் படிந்த கரையுடன் வந்த அஜித்தை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதாவது, அஜித்தும், மணிகண்டன் என்பவரும் ஒரே இடத்தில் வேலை செய்து வரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும், ஒரே பெண்ணை காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே, மணிகண்டனுக்கும், அவர் காதலித்து வந்த பெண்ணிற்கும், இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தாங்கிக்கொள்ளாத அஜித், மணிகண்டன் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக என்னினார். இதனால், மணிகண்டனை தனது இன்னொரு நண்பரின் உதவியுடன், கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

இதுபற்றி அஜித் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.