லத்தியால் தாக்கியதில் இளைஞர் மரணம் – பைக்கை நிறுத்தாததால் போலீஸ் செய்த கொடூர செயல்

2377

மதுரையில் வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக இளைஞரின் பின் மண்டையில் போலீசார் லத்தியால் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சிம்மக்கல் அருகே நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சோதனையின் போது இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்ற  இளைஞர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது.

விவேகானந்த குமார் என்ற இளைஞரின் பின் மண்டையில் லத்தியால் தாக்கியதில், அவர் மயங்கிய நிலையில் மதுரையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த மற்றொரு இளைஞர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் விவேகானந்த குமார் சிகிச்சை பலனின்றி

உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தாக்குதல் நடத்திய போலிசாரை கண்டித்து உறவினர்கள் அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த போலீசார் தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of