உயரதிகாரி மீது தாக்குதல்..! வேடிக்கை பார்த்த காவலர்கள்..! முதலமைச்சரின் அதிரடி முடிவு..!

1075

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த காவல் அதிகாரி ஒருவர், போதை பொருள் கடத்தல் கும்பலால் கடுமையாக தாக்கப்படும் வீடியோ வைரலாக பரவி வந்தது. அந்த வீடியோவில், ஒரு காவல்துறை அதிகாரியை 20லிருந்து 25 நபர்கள் சேர்ந்த கடுமையாக தாக்குகின்றனர்.

அருகில் சில போலீஸ்காரர்களும் உள்ளனர். அந்த உயரதிகாரி தாக்கப்படுவதை வேடிக்கை மட்டும் அவர்கள் பார்க்கின்றனர். இதையடுத்து வந்த கூடுதல் படையினர் அவரை காப்பாற்றுகின்றனர்.

இந்த வீடியோ இணைதளத்தில் வைரலாக பரவியது. இதனை பார்த்த அம்மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங், தங்களது உயரதிகாரி தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்த காவலர்களின் செயல் கோழைத்தனமானது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் போதைப்பொருள் கும்பலின் தாக்குதலின் போது வேடிக்கை பார்த்த காவலர்கள் பணியிலிருந்து நிக்கப்பட்டுள்ளனர்.