“வரிசைலியா வரச்சொல்ற!” – போலீசை புரட்டி எடுத்த பயணிகள்! வைரல் வீடியோ!

678

உத்தரப்பிரேதேச மாநிலம், டியோரியா ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுப்பதற்காக பயணிகள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து போலீசார் ஒருவர் பயணிகளை வரிசையில் நிற்குமாறு ஒழுங்குபடுத்தினார்.

அப்போது, இரண்டு பயணிகள் வரிசையில் நிற்க மறுத்ததுடன், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், போலீசாரை அவர்கள் இருவரும் தரதரவென இழுத்து, ஆடைகளை கிழித்து சரமாரியாக தாக்கினர்.

இதில் போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.இந்த சம்பவத்தால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தாக்குதலுக்கு உள்ளான போலீசார் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

சிசிடிவி காட்சிகளில் அடிப்படையில் இளைஞர்களை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement