மாற்றுத்திறனாளி.. தரதரவென இழுத்து சென்ற காவலர்.. வைரலாகும் வீடியோ..

2247

சில காவல்துறை அதிகாரிகள் எளியோர் மீது, தங்களது அதிகாரங்களை தவறான முறையில் பயன்படுத்தி வருகின்றனர்.

இதேபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வரும் நிலையில், மாற்றுத்திறனாளி இளைஞரை, காவல்துறை அதிகாரி ஒருவர் தரதரவென இழுத்து சென்ற சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது.

மாற்றித் திறனாளி இளைஞர் ஒருவர், தனது வாகனத்தை நிறுத்தும் போது, அவருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஆத்திரம் அடைந்த காவல்துறை அதிகாரி, ஒருகால் இல்லாத அந்த நபரை வலுக்கட்டாயமாக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். பின்னர், அவரை கீழே தள்ளிவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் காவல்துறை அதிகாரிக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகிறது.