ஹெல்மெட் போடாத கணவர்..! மனைவியின் மண்டையை உடைத்த போலீஸ்..! வைரல் வீடியோ..!

1293

செப்டம்பர் 1-ஆம் தேதி அன்று புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தது. இந்த சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து காவல்துறையினர், கண்ணில் விளக்கெண்ணெய் விட்டதைப்போல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைகளுக்கு பயந்து பலரும் சாலை விதிகளை பின்பற்றத் தொடங்கியுள்ளனர்.

ஆனால் இதனை பின்பற்றாத சிலர், எப்படி தப்பித்து செல்வது என்பதிலே குறியாக இருக்கின்றனர். சமீபத்தில் கூட போலீசார் அபாராதம் செலுத்த சொன்னதற்கு வாலிபர் ஒருவர் வண்டியையே எரித்து விட்டார். இந்நிலையில் இணையதளங்களில் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், மணைவியுடன் ஒருவர் பைக்கில் ஹெல்மட் இல்லாமல் செல்கிறார். அதனைப்பார்த்த போலீசார் அவர்களை வழிமறிக்க முயற்சி செய்கின்றனர். போலீசைப் பார்த்த அந்த நபர், வண்டியை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

இதனையடுத்து போலீஸ்காரர்களில் ஒருவர் தான் வைத்திருந்த லத்தியால், பின்னாடி இருந்த அந்த பெண்ணின் மண்டையில் தவறுதலாக அடித்து விடுகிறார். அவருக்கு மண்டையில் புகுபுகுவென ரத்தம் வருகிறது. இந்த சம்பவம் நடந்து 1 மாதம் ஆகியிருந்தாளும், தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of