கர்ப்பிணி பெண்ணின் ஆடைகளை களைந்த போலீஸ்..? பிறகு நேர்ந்த பயங்கரம்..!

1334

அசாம் மாநிலம், டாரங் மாவட்டத்தில் உள்ள ஒரு புறக்காவல் நிலையத்துக்கு, 2 சகோதரிகளுடன் வந்த கர்ப்பிணி பெண்ணை,போலீசார் அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

பெண்ணின் ஆடைகளை களைந்து தாக்கியதில், வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்ததாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது.

இதனால் இந்த சம்பவத்தின் உண்மை தன்மையை அறிய, அசாம் மாநில மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்துமாறு மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, கர்ப்பிணி பெண் தாக்கப்படுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement