“ஹலோ சார்.. நாங்க..,” போலீசுக்கே பொங்கல்.. பலே கும்பலுக்கு வலைவீச்சு..

557

ராமநாதபுரம் பஜார் காவல்நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்துவரும் கிருஷ்ண மூர்த்தியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. வங்கியிலிருந்து பேசுவதாக கூறிய அந்த மர்ம நபர், உங்களுடைய ஏ.டி.எம் கார்டு காலாவதியாகிவிட்டதால், அதனை புதுப்பிக்க சில தகவல் வேண்டுமென கூறியுள்ளார்.

இதனையடுத்து துளியும் யோசிக்காத சார்பு ஆய்வாளர் கிருஷ்ண மூர்த்தி, ஏ.டி.எம் ரகசிய எண் உட்பட அந்த நபர் கேட்ட தகவல்களை கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து கிருஷ்ண மூர்த்தியின் கனரா வங்கி கணக்கிலிருந்து மூன்று தவனையாக மொத்தம் ஒரு லட்சம் ரூபாயை மர்ம நபர் சுருட்டியுள்ளார்.

அவரது செல்போன் எண்ணுக்கு பணம் எடுக்கப்பட்டதாக வந்த குறுந்தகவலை பார்த்து அதிர்ச்சியடைந்த சார்பு ஆய்வாளர் கிருஷ்ணா மூர்த்தி உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கி கிளையை அணுகி கேட்டபோது ஒரு லட்ச ரூபாய் பணம் மோசடியாக எடுக்கப்பட்டது உறுதியானது.

இது தொடர்பாக அவர் பணியாற்றும் பஜார் காவல் நிலையத்திலேயே புகாரளிக்கப்பட்டு, எஸ்.பி அறிவுறுத்தலின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வங்கி மோசடி குறித்து மக்களுக்கு காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், காவல் சார்பு ஆய்வாளரே தற்போது மோசடி கும்பலிடம் கணக்கு விபரம் குறித்த தகவலை கொடுத்து லட்ச ரூபாய் பணத்தை பறிக்கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement