நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் சோதனை

277
palayamkottai

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று சிறையில் போலீசார் சோதனை நடத்தினர்.

புழல் மத்திய சிறையில் உயர் பாதுகாப்புப் பிரிவில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு டிவி, செல்போன், சொகுசு படுக்கைகள் என பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டிருப்பது தொடர்பாக புகைபடங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து புழல் சிறையில் பணியாற்றி வந்த 17 வார்டன்கள் வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் சட்டம் ஒழுங்கு போலீசார் சோதனை நடத்தினர்.

துணை ஆணையர் தலைமையில் 75 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். விதிகளை மீறி சிறையில் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.